தோழிக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம்; சர்ச்சையில் சிக்கிய யாஷிகா


தோழிக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம்; சர்ச்சையில் சிக்கிய யாஷிகா
x

யாஷிகா ஆனந்த் தனது தோழிக்கு கண்கள் மூடி லயித்தபடி உதட்டுடன் உதடு சேர்த்து யாஷிகா ‘காதல்’ முத்தம் கொடுத்துள்ள படமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடம்பெற்று சர்ச்சையானது.

தமிழ் சினிமாவின் கவர்ச்சி கதா நாயகியாக வலம் வருபவர், யாஷிகா ஆனந்த். விபத்தில் சிக்கி, அதற்காக சிகிச்சை பெற்று மீண்டு வந்த அவர், தற்போது முன்பு போலவே நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

அதேவேளை சமூக வலை தளங்களிலும் தனது கவர்ச்சிப் படங்களை போட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். தாராளமாக கவர்ச்சி காட்டும் படங்களை பதிவிட்டு, முன்பு போலவே எப்படியும் பட வாய்ப்புகளை பெறுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு படம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நீண்டகாலம் கழித்து தனது தோழியை சந்தித்திருப்பதாகவும், அவருடன் இனிமையான பொழுதுகளை கழிப்பதாகவும்அவர் பதிவிட்டிருந்தார். தோழியுடன் ஒன்றாக ஊர்சுற்றுவது போன்ற சில புகைப்படங்களையும் அவர் இணைத்திருந்தார்.

அதில் ஒரு படத்தில் தனது தோழிக்கு கண்கள் மூடி லயித்தபடி உதட்டுடன் உதடு சேர்த்து யாஷிகா 'காதல்' முத்தம் கொடுத்துள்ள படமும் இடம்பெற்றுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 'யாஷிகா... யூ டூ', 'ஓ... அப்படியா...' என்று கண்டபடி விமர்சனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதேவேளை சில கிண்டல் பேர்வழிகளும் 'என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா...', என நையாண்டியுடன் கருத்துகளை பதிவிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story