நடிகையின் மார்பகத்தையும், இடுப்பையுமே பார்க்க விரும்புகிறார்கள்..! திறமையை அல்ல- ஜீனத் அமன் கோபம்


நடிகையின் மார்பகத்தையும், இடுப்பையுமே பார்க்க விரும்புகிறார்கள்..! திறமையை அல்ல- ஜீனத் அமன் கோபம்
x
தினத்தந்தி 30 Jun 2023 11:13 AM GMT (Updated: 30 Jun 2023 11:41 AM GMT)

71 வயதாகும் பாலிவுட் நடிகை ஜீனத் அமன் தனது இளமை காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தற்போதைய இளைஞர்களையும் வாயடைக்க செய்து வருகிறார்

மும்பை

பாலிவிட்டில் அமிதாப் பச்சன் முதல் பெரோஸ் கான் வரையிலான சூப்பர் ஸ்டார்களுடன் ஜீனத் அமன் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இந்தி பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜீனத் அமன். 'தம்மர தம்' என்ற பாடலில் ஆடிப்பாடி அந்த காலத்து இந்திய இளைஞர்களை கிறங்கடித்து இருந்தார். தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.யாதோங் கி பாரத், ரொட்டி பிராடோ அவுர் மகன், சத்தியம் சிவம் சுந்தரம், டான் மற்றும் தோஸ்தானா போன்ற பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார்.1971 ஆம் ஆண்டு 'ஹல்சல்' படத்தின் மூலம் பாலிவுட்டில் ஜீனத் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார்,

71 வயதாகும் பாலிவுட் நடிகை ஜீனத் அமன் தனது இளமை காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தற்போதைய இளைஞர்களையும் வாயடைக்க செய்து வருகிறார். ஜீனத் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

ஒரு ஹீரோயின் திறமையை பார்ப்பது இல்லை.மார்பு, இடுப்பு, முகம், பார்ப்பதில் தான் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள், ஹீரோயின் வாய்ப்பு கிடைக்க நிறைய கஷ்டப்பட வேண்டும். சினிமா உலகில் வாய்ப்புக்காக அட்செஸ்மெண்ட் செய்தாக வேண்டும் என கூறி உள்ளார்.

மேலும் மேலும், திரைப்படங்களில் பணியாற்ற, நடிகைகள் பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோரிடம் அட்செஸ்மெண்ட் செய்தாக வேண்டும். அதன் பிறகு அவருக்கு படத்தில் வாய்ப்பு வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் இருந்தது. இன்றும் அப்படியே இருக்கிறது என்று நடிகை ஜீனத் அதிருப்தி தெரிவித்தார்.

எனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில், எனது திறமை மீது அல்ல, எனது முகம் மற்றும் உருவத்தில்தான் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். அதற்காக மெலிதான இடுப்பு மற்றும் கவர்ச்சியான உருவம் கொண்ட கவர்ச்சியான பெண்கள் மட்டுமே சினிமாவில் அனுமதிக்கப்படுகிறார்கள். தொழில்துறையின் இந்த யதார்த்தத்தை அறிந்த பிறகு, நான் என் தோற்றத்தைப் அவ்வாறாக மாற்றிக்கொண்டேன். அப்படிப்பட்ட பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனது பணி மற்றும் நான் செய்த எதற்கும் எனக்கு வருத்தம் இல்லை என்று தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.


Next Story