யார் இவன்?


யார் இவன்?
x
தினத்தந்தி 23 Feb 2017 9:30 PM GMT (Updated: 22 Feb 2017 8:16 AM GMT)

எம்.ஜி.ஆர். நடித்த ‘படகோட்டி,’ சிவாஜிகணேசன் நடித்த ‘உத்தம புத்திரன்’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர், டி.பிரகாஷ்ராவ்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘படகோட்டி,’ சிவாஜிகணேசன் நடித்த ‘உத்தம புத்திரன்’ உள்பட பல படங்களை டைரக்டு செய்தவர், டி.பிரகாஷ்ராவ். இவருடைய பேரன் டி.சத்யா, ‘யார் இவன்?’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு டைரக்டராக அறிமுகம் ஆகிறார். இவர், ஏற்கனவே 2 தெலுங்கு படங்களை டைரக்டு செய்திருக்கிறார்.

‘யார் இவன்?’ படத்தில் சச்சின் கதாநாயகனாகவும், ஈஷா குப்தா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பிரபு, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காதலும், மர்மமும் கலந்த திகில் படம், இது!

Next Story