மீண்டும் நித்யா!


மீண்டும் நித்யா!
x
தினத்தந்தி 27 March 2017 2:01 PM IST (Updated: 27 March 2017 2:01 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் பட உலகில், 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர், நித்யா.

குடும்பம் ஒரு கதம்பம், தீர்ப்பு, தாவணிக்கனவுகள், உயர்ந்த உள்ளம், மாரியம்மன் திருவிழா உள்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து இருந்தார். 1987-ல் ஒளிப்பதிவாளர் ரவீந்திரனை இவர் திருமணம் செய்து கொண்டதும், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார். 30 வருடங்களுக்குப்பின், நித்யா மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

உதயநிதியின், ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில், கதாநாயகி ரெஜினாவின் அம்மாவாக நடிக்கிறார். தொண்டன், ஓநாய்கள் ஜாக்கிரதை ஆகிய படங்களிலும் இவர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். “தொ டர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன்” என்று நித்யா கூறுகிறார்!
1 More update

Next Story