2 பாகங்களாக உருவாகும் தமிழ் படங்கள்! சுருதிஹாசன்


2 பாகங்களாக உருவாகும் தமிழ் படங்கள்! சுருதிஹாசன்
x
தினத்தந்தி 14 May 2017 6:44 AM GMT (Updated: 14 May 2017 6:44 AM GMT)

‘பாகுபலி’ படம் 2 பாகங்களாக வெளிவந்து பிரமிக்க வைத்தது போல், மூன்று தமிழ் படங்கள் 2 பாகங்களாக தயாராகி வருகின்றன.

அதில் ஒரு படம், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.’ இதில் சிம்பு நடிக்கிறார். இன்னொரு படம், ‘வட சென்னை.’ இதில் தனுஷ் நடிக்கிறார். இவை தவிர, சுந்தர் சி. டைரக்டு செய்ய இருக்கும் ‘சங்கமித்ரா’ படமும் 2 பாகங் களாக தயாராகிறது.

மிக பிரமாண்டமான முறையில் உருவாகும் ‘சங்கமித்ரா’ படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, சுருதிஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்காக சுருதிஹாசன் வாள் வீசும் பயிற்சி பெற்றுள்ளார்!

Next Story