நெளிய வைத்த உடை


நெளிய வைத்த உடை
x
தினத்தந்தி 10 Jun 2017 7:40 AM GMT (Updated: 10 Jun 2017 7:40 AM GMT)

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலக சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலக சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகியான பெல்லா ஹதித்தும் கலந்து கொண்டார். மற்ற நடிகைகளை போன்றே புதுமையான ஆடைகளை அணிந்துகொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடைபோட்டவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவர் அணிந்த உடையே அவருக்கு பிரச்சினையாகிவிட்டது. பெல்லா ஹதித் அணிந்த கவுனில் உள்ள கட் மூலம் அவரது தொடைகள் நன்கு தெரிந்தது. இந்நிலையில் அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும்போதும், நடந்தபோதும் ஆடை மேலும் விலகி தெரியக் கூடாத இடம் தெரிந்துவிட்டது. திரைப்பட விழாவில் கூடியிருந்தவர் களுக்கு முன்பு பெல்லாவின் ஆடை விலகிய போதிலும் அவர் தைரியமாக சமாளித்துவிட்டு சென்றுவிட்டார். அதை பார்த்தவர்கள் தான் கொஞ்சம் நெளிந்தனர்.

கடந்த ஆண்டும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெல்லா கலந்து கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு சிவப்பு நிற உடை அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தபோதும் ஆடை விலகியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெல்லாவிற்கு இதே வேலையாகி விட்டது என்ற சலசலப்பும் ஏற்பட்டது.

Next Story