அதிரடி நாயகி


அதிரடி நாயகி
x
தினத்தந்தி 24 Jun 2017 9:24 AM GMT (Updated: 24 Jun 2017 9:24 AM GMT)

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர், ஸ்கார்லட் ஜொஹன்சன். அதிரடி-ஆக்‌ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் இவரின் கைவசம் இப்போது 4 புதிய படங்கள் இருக்கின்றன.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர், ஸ்கார்லட் ஜொஹன்சன். அதிரடி-ஆக்‌ஷன் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் இவரின் கைவசம் இப்போது 4 புதிய படங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று, ஸ்கார்லட் நிஜ வாழ்விலும் அதிரடியானவர்தான் என்பதை பறைசாற்றியிருக்கிறது.

‘பெண்கள் செக்ஸ் பற்றி பேசக்கூடாது. மீறி பேசினால் அவரைத் தவறான, மோசமான பெண் என்று இந்த சமூகம் முத்திரை குத்தி விடுகிறது. பெண்கள் செக்ஸ் பற்றி பேச ஆரம்பித்தாலோ அல்லது அந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டினாலோ அது தவறானது என்பார்கள். ஏனெனில் செக்ஸ் என்பது ஆண்களுக்கான விஷயமாக பார்க்கப்படுகிறது. செக்ஸ் பற்றி ஆண்கள் பேசலாம். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஏன்?.. வீடியோவாகவும் பார்க்கலாம். ஆனால் பெண்கள் மட்டும் செக்ஸ் பற்றி பேசவேக் கூடாது.

ஆனால் நான் அப்படி இருக்கப்போவதில்லை. என் இரண்டு வயது மகள் ரோஸ் டாரத்திற்கு நல்ல முன் உதாரணமாக இருக்க விரும்புகிறேன். என் மகள் எந்த விஷயமாக இருந்தாலும், என்னிடம் பேசக்கூடிய நிலையில் இருப்பார் என்று நம்புகிறேன். உரிய வயதில் பாலியல் கல்வியை என் மகளுக்கு சொல்லிக் கொடுப்பேன். அப்போது தான் பாலியல் வன்முறைகளை தடுக்க முடியும். செக்ஸ் பற்றி பேச பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று ஸ்கார்லெட் தெரிவித்துள்ளார். 

Next Story