இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 27 Jun 2025 7:38 PM IST
புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் ராஜினாமா
3 நியமன எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக புதுச்சேரி சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார். முன்னதாக, பாஜகவை சேர்ந்த சாய் சரவணகுமார் ஆதிதிராவிடர் நலத் துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
- 27 Jun 2025 6:47 PM IST
நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு தாக்கல்
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை. போதைப்பொருளை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் மருத்துவ அறிக்கையில் இல்லை என்று நடிகர் கிருஷ்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.
- 27 Jun 2025 5:55 PM IST
விஜய்யுடன் சிங்கப்பூர் தூதரக அதிகாரி எட்கர் பாங் சந்திப்பு
தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை சந்தித்துள்ளார் சிங்கப்பூர் தூதரக அதிகாரி எட்கர் பாங்.
- 27 Jun 2025 5:39 PM IST
ஒகேனக்கலில் நீர்வரத்து 78,000 கன அடியாக உயர்வு
ஒகேனக்கலில் காலையில் நீர்வரத்து வினாடிக்கு 70,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 78,000 கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 27 Jun 2025 5:06 PM IST
மகளை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை
கடலூர், சிதம்பரம் அருகே மடப்புரத்தில் அபிதா என்ற இளம் பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை. தலைமறைவான தந்தை அர்ஜுனனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- 27 Jun 2025 4:34 PM IST
அதிமுக உட்கட்சி விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை குறித்து எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும்? உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதை தெரிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரத்தில் ஆரம்ப கட்ட விசாரணைக்கு காலவரம்பு நிர்ணயிக்கக்கோரி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்து உள்ளார்.
- 27 Jun 2025 4:32 PM IST
தமிழகத்திற்கு 31.24 டிஎம்சி காவிரி நீரை திறக்க உத்தரவு
காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூலையில் 32.24 டி.எம்.சி. தண்ணீரை திறக்க காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில், ஆணையத்தின் 41ஆவது கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது.
- 27 Jun 2025 3:58 PM IST
தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் - அமைச்சர் தகவல்
கேரளாவில் அமலில் இருக்கும், பள்ளிகளில் மாணவர்கள் உரிய நேரத்தில் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் 'வாட்டர் பெல்’ திட்டம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்று ஓசூரில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
- 27 Jun 2025 2:33 PM IST
பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சமையல் கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் கூடத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
- 27 Jun 2025 1:56 PM IST
ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை
சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில இளைஞர் ரோஷன் குமார் (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டையை காட்டி மிரட்டி முடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.