நிவின்பாலியுடன் ஜோடி சேருகிறார், நயன்தாரா!


நிவின்பாலியுடன் ஜோடி சேருகிறார், நயன்தாரா!
x
தினத்தந்தி 17 July 2017 2:59 PM IST (Updated: 17 July 2017 2:59 PM IST)
t-max-icont-min-icon

நயன்தாரா மூத்த கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

 விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அதர்வா, ஆரி ஆகியோருடன் அவர் இணைந்து நடித்து, இன்னமும் இளைமையாகவே இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

தமிழ் படங்களில் இளம் கதாநாயகர்களுடன் நடித்து வரும் அவர், மலையாள பட உலகிலும் இதே பாணியை பின்பற்ற தொடங்கி இருக்கிறார். அதன் முதல் கட்டமாக இளம் கதாநாயகன் நிவின்பாலியுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து இருக்கிறார். இதை நிவின்பாலியே உறுதி செய்தார்.

“நானும், நயன்தாராவும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறோம். அந்த படத்தை வினித் சீனிவாசன் டைரக்டு செய்வார்” என்று அவர் கூறினார்!
1 More update

Next Story