‘கோலி சோடா–2’ முடிவடைந்தது


‘கோலி சோடா–2’ முடிவடைந்தது
x
தினத்தந்தி 4 Jan 2018 10:00 PM GMT (Updated: 4 Jan 2018 8:06 AM GMT)

விஜய் மில்டன் டைரக்‌ஷனில் தயாராகி வந்த ‘கோலி சோடா–2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

விஜய் மில்டன் டைரக்‌ஷனில் தயாராகி வந்த ‘கோலி சோடா–2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படத்தை பற்றி டைரக்டர் விஜய் மில்டன் கூறும்போது, ‘‘கோலி சோடா–2’ படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் என் உழைப்புக்கு மேலும் மதிப்பை கூட்டியிருக்கிறது. எங்கள் உழைப்பும், அர்ப்பணிப்பும் இந்த படத்தை வெற்றி பெற வைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

‘கோலி சோடா–2’ படத்தில் ரேகா, ரோகிணி, டைரக்டர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், சரவண சுப்பையா, ஸ்டண்ட் ஷிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Next Story