சினிமா துளிகள்

சொந்த வீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்! + "||" + Aishwarya Rajesh in his own house

சொந்த வீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

சொந்த வீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ்!
சிறு முதலீட்டு படங்களில், சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய்சேதுபதியின் ஜோடியாக 2 படங்களில் நடித்த பின், பிரபலமானார்.
தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படம், அவருக்கு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. தமிழ் படங்களுடன் அவருக்கு ஒரு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

சென்னை கோடம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு அருகில், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்த அவர், தியாகராய நகரில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். இதுவும், அடுக்கு மாடி குடியிருப்புதான். ஐஸ்வர்யா ராஜேஷ், மிக விரைவில் சொந்த வீட்டுக்கு குடிபோக இருக்கிறார்!