நயன்தாராவின் மலையாள படம்


நயன்தாராவின் மலையாள படம்
x
தினத்தந்தி 21 April 2018 7:43 AM GMT (Updated: 21 April 2018 7:43 AM GMT)

நயன்தாரா நடிக்கும் மலையள படத்திற்கு ‘கோட்டயம் குர்பானா’ என்று பெயரிட்டுள்ளனர்.

மலையாள சினிமா உலகில் பிரபல கதாசிரியராக இருப்பவர் ஆர்.உன்னி. இவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, துல்கர் சல்மான் மற்றும் பார்வதி மேனன் ஆகியோர் நடித்து வெளியான படம் ‘சார்லி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து துல்கர்சல்மான் நடிக்க உள்ள ‘ஒரு பயங்கர காமுகன்’ என்ற படத்திற்கும் உன்னி கதை எழுதியுள்ளார். இந்தப் படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் உன்னி, கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு கதையை உருவாக்கி வைத்திருந்தாராம். அந்தக் கதையை கேட்ட நயன்தாரா, கதை பிடித்துப்போகவே அதில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் ஒரு செய்தி வலம் வந்தது. தற்போது உன்னியின் கதையில் நயன்தாரா நடிக்கும் அந்தப் படத்திற்கு ‘கோட்டயம் குர்பானா’ என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை மகேஷ் வெட்டியார் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். 

Next Story