ஸ்பானிஷ் படம் தமிழில் ‘ரீமேக்' ஆகிறது


ஸ்பானிஷ் படம் தமிழில் ‘ரீமேக் ஆகிறது
x
தினத்தந்தி 29 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-06-28T13:41:45+05:30)

2010-ம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான ‘ஜூலியாஸ் ஜஸ்’ திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

குய்லேம் மோரலேஸ் இயக்கிய ‘ஜூலியாஸ் ஜஸ்’  திரைப்படத்தில் பென்னன் ரியூடா என்ற நடிகை நடித்திருந்தார். இது மிகவும் வித்தியாசமான திரைப்படம். இதில் பென்னன் ரியூடா, இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். கதாநாயகியின் பார்வையற்ற சகோதரி மர்மமான முறையில் இறந்துபோகிறார். அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் கதாநாயகிக்கும் கண் பார்வை பறிபோகிறது. அதன் பின்பும் தன் சகோதரியின் இறப்பில் உள்ள மர்மத்தை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் ‘ஜூலியாஸ் ஐஸ்’ படத்தின் மீதி கதை. திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்ட இப்படம் ஐரோப்பா நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, வசூல் மழை பொழிந்தது. இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ‘ரீமேக்’ செய்ய உள்ளனர். 

Next Story