வெற்றி பட டைரக்டர்களுடன், ஆர்யா!


வெற்றி பட டைரக்டர்களுடன், ஆர்யா!
x
தினத்தந்தி 14 July 2018 9:15 PM GMT (Updated: 14 July 2018 9:46 AM GMT)

கடந்த சில வருடங்களாக ஆர்யா நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் வெற்றிப்பட டைரக்டர்களை தேடிச்சென்று அவர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ஆர்யா நடித்து வந்த `கஜினிகாந்த்' படம் முடிவடைந்து விட்டது. இந்த படத்தை சந்தோஷ் ஜெயகுமார் டைரக்டு செய்திருக்கிறார். இவர், `ஹர ஹர மகாதேவகி, `இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.

அடுத்து கே.வி.ஆனந்த் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஆர்யா சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இது, அவருடைய 37-வது படம். இதுபற்றி சூர்யா கூறும்போது, ``ஆர்யா நடிக்கும் 2 புதிய படங்களும் அவருக்கு திருப்பத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அவருடைய `மார்க்கெட்டை' தூக்கி நிறுத்தும் என்றார்.

இதையடுத்து, `அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் டைரக்‌ஷனில் ஒரு படம் நடிக்கவும் ஆர்யா சம்மதித்து இருக்கிறாராம்! 

Next Story