‘அட்டகத்தி’ தினேசுடன் ‘கயல்’ ஆனந்தி இணைந்தார்!

‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தில், அவருடன் ‘கயல்’ ஆனந்தி ஜோடி சேர்ந்தார்.
இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம், இது. டைரக்டர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை டைரக்டு செய்கிறார். பா.ரஞ்சித்தின் சொந்த பட நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ், இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-
‘‘கதைப்படி, கதாநாயகன் தினேஷ், லாரி டிரைவர். அவர் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. படம், உலக அரசியல் பேசும். தினேஷ்-கயல் ஆனந்தியுடன் முக்கிய வேடத்தில் ரித்விகா நடிக்கிறார்.
கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, தென்மா இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கடலூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.’’
Related Tags :
Next Story