5 கதாநாயகிகள் நடிக்கும் படம்


5 கதாநாயகிகள் நடிக்கும் படம்
x
தினத்தந்தி 23 Aug 2019 3:00 AM IST (Updated: 22 Aug 2019 5:22 PM IST)
t-max-icont-min-icon

பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.

நகைச்சுவையும், திகிலும் கலந்து, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. ‘தாதா 87’ படத்தை இயக்கிய விஜய்ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம், இது. இதில், 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இதற்கிடையில், அம்சவர்தனை வைத்து டைரக்டர் விஜய்ஸ்ரீ ஜி, ‘பீட்ரு’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிவடைந்ததும் இவர், ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ பட வேலையை தொடங்குகிறார்!
1 More update

Next Story