அதிருப்தியில் தெலுங்கு பட உலகம்!

நயன்தாரா திரையுலகுக்கு அறிமுகமாகி 15 வருடங்களுக்கும் மேலாகி விட்டது. தமிழில், ‘ஐயா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர், அந்த படத்துக்கு குறைந்த சம்பளமே வாங்கினார்.
தமிழில் பிரபலமான அவர் தெலுங்கு படங்களிலும் நடிக்க ஆரம்பித்து, அங்கேயும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவருடைய சம்பளம் ஒரு கோடி ரூபாயை தாண்டியது. இப்போது அவர், ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.
என்றாலும், அவர் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாக்களிலோ, ஊடக பேட்டி களிலோ கலந்து கொள்வதில்லை. படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே அதை சொல்லி விடுகிறார். இதை தமிழ் பட உலகம் கண்டுகொள்வதில்லை. ஆனால், தெலுங்கு பட உலகில், இது பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது.
அவர் நடித்து முடித்துள்ள ‘சாயிரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார். ரூ.5 கோடி சம்பளம் வாங்கி விட்டு, விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்றால் எப்படி? என்று படக்குழுவினர் பிரச்சினையை கிளப்பி இருக்கிறார்கள். இதுதொடர்பாக தெலுங்கு பட உலகமும், ரசிகர்களும் அதிருப்தி அடைந்து இருக்கிறார்கள்!
Related Tags :
Next Story