எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தது எப்படி?


எஸ்.ஜே.சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தது எப்படி?
x
தினத்தந்தி 19 Oct 2019 11:30 PM GMT (Updated: 19 Oct 2019 6:04 PM GMT)

ஒரு திறமையான நடிகைக்கு கண்களும், அவை வெளிப்படுத்தும் உணர்வுகளும் மிக முக்கியம். அது, சாந்தினிக்கு மிக இயல்பாக அமைந்துள்ளது.

 ‘சித்து பிளஸ்-2’ படத்தில் பாக்யராஜினால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ‘ராஜா ரங்குஸ்கி’ வரை இவரின் கலைப்பயணம் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் இவர் ஏற்று நடித்த வில்லி கதாபாத்திரம், பலரின் புருவங்களை உயர்த்த வைத்தது. ‘‘நல்ல நடிகை’’ என்ற பெயரை சம்பாதித்து கொடுத்தது. அந்த படத்தை பார்த்த டைரக்டர் பாலாஜி சக்திவேல் தனது புதிய படத்தில் சாந்தினி நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

ராதாமோகன் இயக்கும் ‘பொம்மை’ படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இந்த 2 படங்களும் என் சினிமா பயணத்தில் மிக முக்கிய படங்களாக இருக்கும் என்கிறார், சாந்தினி.

Next Story