சத்யாவும், 3 குருக்களும்...
பார்த்திபன் நடித்து, டைரக்டு செய்து சமீபத்தில் வெளியான ‘ஒத்த செருப்பு’ திரைப்படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஒரே கதாபாத்திரத்தை கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்த இந்த படம், ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு முக்கிய காரணமாக பேசப்பட்டது.
இதுகுறித்து ‘ஒத்த செருப்பு’ படத்தின் இசையமைப்பாளர் சி.சத்யா கூறியதாவது:-
‘‘என் தந்தை சிதம்பரம், ஒரு நாடக நடிகர். என்.எஸ்.கே.வின் நாடகக்குழுவில் நடித்திருக்கிறார். தியாகராஜ பாகவதரின் தீவிர ரசிகர். தன்னைப் போலவே எங்களையும் இசையில் ஈடுபாடு மிக்கவர்களாகவே அவர் வளர்த்தார். எனது முதல் குரு என் தந்தை. 2-வது குரு, என் தந்தையின் நண்பர் நாவலை ராஜா. அவரும் இசையமைப்பாளர்தான். 3-ம் குரு குருபோலகம் சாம்பசிவ அய்யர்.
பாகவதர் காலம் தொட்டு எல்லா இசையையும் ரசிப்பவன் என்றாலும், இளையராஜாதான் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினார். தமிழில் ‘நெடுஞ்சாலை’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்கள் எனக்கு நல்ல அங்கீகாரம் பெற்று தந்தன. அதற்கு பிறகு திரையுலகில் மிகப்பெரிய அங்கீகாரத்தை ‘ஒத்த செருப்பு’ படம் அளித்திருக்கிறது. இப்போது 4 புதிய படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.’’
Related Tags :
Next Story