சினிமா துளிகள்

ஆர்யாவுக்கு வில்லனாக மகிழ்திருமேனி! + "||" + Mahil Thirumeni is villain for Arya

ஆர்யாவுக்கு வில்லனாக மகிழ்திருமேனி!

ஆர்யாவுக்கு வில்லனாக மகிழ்திருமேனி!
‘காலா’ படத்தை அடுத்து பா.ரஞ்சித் டைரக்டு செய்யும் அடுத்த படத்தில், ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.
குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம். படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன. ஆர்யா கதாநாயகனாக இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் நடிக்கிறார். 

வில்லனாக டைரக்டர் மகிழ்திருமேனி நடிக்கிறார். கதாநாயகன் ஆர்யா கதாபாத்திரத்துக்கு இணையாக மகிழ்திருமேனியின் வில்லன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.