பாடலை வெளியிட்டார், தனுஷ்!


பாடலை வெளியிட்டார், தனுஷ்!
x
தினத்தந்தி 16 Feb 2020 1:15 AM GMT (Updated: 15 Feb 2020 2:57 PM GMT)

சுப்பிரமணியம் சிவா இயக்க, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஆத்மியா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘வெள்ளை யானை’ படத்தின் கதை, முழுக்க முழுக்க விவசாயிகள் தொடர்பான கதை.

ஈ.ராமதாஸ், இயக்குனர் மூர்த்தி, எஸ்.எஸ்.ஸ்டான்லி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் விவசாயிகளாக நடித்துள்ளனர்.

இந்த படத்தில் இடம் பெறும் ‘வெண்ணிலா’ என்ற பாடலை நடிகர் தனுஷ் வெளியிட்டார். பாடல் வரிகளை உமாதேவி எழுதியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். விஜய் நரேன், சங்கீதா கருப்பையா ஆகிய இருவரும் பாடியிருக்கிறார்கள். படத்தை தயாரித்து இருப்பவர், எஸ்.வினோத்குமார்!

Next Story