சினிமா துளிகள்

தெலுங்கு படத்தில் மைக் டைசன்? + "||" + Mike Tyson in Telugu film?

தெலுங்கு படத்தில் மைக் டைசன்?

தெலுங்கு படத்தில் மைக் டைசன்?
தெலுங்கு சினிமாவின் இளம் கதாநாயகனாக உருவெடுத்துள்ள விஜய் தேவரகொண்டாவுக்கு சமீப கால திரைப் படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை.
கடந்த மாதம் வெளியான ‘வேல்ட் பேமஸ் லவ்வர்’ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் அந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. 

இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வருபவரும், பல வெற்றிப்படங்களையும், அதன் மூலமாக பல கதாநாயகர்களையும் உயர்த்தி விட்டவருமான பூரிஜெகன்னாத் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் விஜய் தேவரகொண்டா நடிக்கிறார். 

இந்தப் படத்தை ஆரம்பத்தில் பூரிஜெகன்னாத்தும், நடிகை சார்மி கவுரும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. தற்போது இவர்களுடன் இந்தியில் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கும் இந்தத் திரைப்படத்தில், பிரபல குத்துச் சண்டை வீரராக மைக் டைசனை நடிக்க வைக்க வேண்டும் என்பது இயக்குனர் பூரி ஜெகன்னாத்தின் ஆசையாக இருந்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் உள்ளிட்ட விஷயங்களை கருத்தில் கொண்டு, அந்த எண்ணத்தை கிடப்பில் போட்டிருந்தார் பூரி ஜெகன்னாத். 

ஆனால் அவரது ஆசையை, தற்போது தயாரிப்பில் இணைந்திருக்கும் கரண் ஜோகர் நிறைவேற்ற உறுதிஅளித்திருக்கிறாராம். அதாவது இந்தப் படத்தில் மைக் டைசன் அல்லது அவருக்கு இணையாக புகழ்பெற்ற ஒரு குத்துச் சண்டை வீரரை ஒப்பந்தம் செய்து தருவதாக கூறியிருக்கிறாராம்.