சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ சவுகார் ஜானகியின் 400-வது படம்


சந்தானம் நடிக்கும் ‘பிஸ்கோத்’ சவுகார் ஜானகியின் 400-வது படம்
x
தினத்தந்தி 24 April 2020 11:15 AM IST (Updated: 24 April 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

சவுகார்’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தவர், சவுகார் ஜானகி.

சவுகார்’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்தவர், சவுகார் ஜானகி. அந்த படத்தில், அவருடைய கதாபாத்திரத்தின் பெயர், ‘சவுகார்.’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜானகியாக இருந்த அவர், ‘சவுகார் ஜானகி’ என்று அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து அவர் பிரபலமானார்.

‘படிக்காத மேதை’, ‘பணம் படைத்தவன்’, ‘உயர்ந்த மனிதன்’, ‘ஒளிவிளக்கு’, ‘புதிய பறவை’, ‘பாபு’, ‘இரு கோடுகள்’ ஆகியவை அவர் நடித்து காலத்தால் அழிக்க முடியாத வெற்றி படங்கள்.

மூத்த நடிகையான அவர் இதுவரை 400 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடைய 400-வது படம், ‘பிஸ்கோத்.’ இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, அவருடைய பாட்டியாக சவுகார் ஜானகி நடித்துள்ளார். கதாநாயகி, தாரா அலிஷா.

‘பிஸ்கட்’ கம்பெனியில் கூலித்தொழிலாளியாக இருந்த ஒருவன், தன் உழைப்பால் முன்னேறி அந்த கம்பெனிக்கே அதிபர் ஆகும் கதை.

‘ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், இந்த படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இன்னொரு புதிய படம், ‘தள்ளிப்போகாதே’. இது, கவித்துவமான காதல் படம். அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.
1 More update

Next Story