ஜீ.வி.பிரகாஷ் நடிக்க வசந்தபாலன் இயக்கிய ‘ஜெயில்’
ஜீ.வி.பிரகாஷ் நடிக்க வசந்தபாலன் அடுத்து இயக்கியுள்ள புதிய படம், ‘ஜெயில்.’
அங்காடி தெரு, வெயில், அரவான், காவிய தலைவன் ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன் அடுத்து இயக்கியுள்ள புதிய படம், ‘ஜெயில்.’ இந்த படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
“ஜெயில் என்றதும் இது ஜெயிலில் நடக்கிற கதை என்று கற்பனை செய்ய வேண்டாம். ஜெயில் போன்ற உணர்வை ஏற்படுத்துகிற கதை. ஜீ.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக, ‘கர்ணா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். நடிகர் கிட்டியின் மகன் நந்தன்ராம், ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அபர்நதி கதாநாயகியாக, குட்கா விற்கும் பெண்ணாக வருகிறார். ஜீ.வி.பிரகாசின் அம்மாவாக ராதிகா சரத்குமார் நடித்து இருக்கிறார்.
நான் (வசந்தபாலன்) கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறேன். ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். இவர், ‘சவரகத்தி,’ ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களை வெளியிட்டவர்.
ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க, பாடல்களை கபிலன் எழுதியிருக்கிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.”
Related Tags :
Next Story