‘சித்தப்பா’ வேடத்தில் விக்னேஷ்

‘சின்னத்திரை’யில் முத்திரை பதித்து வரும் நடிகர்களில் விக்னேசும் ஒருவர்.
இவர், ‘பூவே உனக்காக’ என்ற தொடரில், ஒரு நேர்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பையும், தோற்றத்தையும் பார்த்து, ‘ராகு கேது’ என்ற புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
இந்த புராண தொடரில் விக்னேஷ், ‘திருமால்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மறைந்த வில்லன் நடிகரான ஆர்.எஸ்.மனோகரிடம் உதவி டைரக்டராக இருந்த தாமோதரன் இயக்குகிறார்.
‘ராகு கேது’ தொடர் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகிறது. இதில், ‘கிராபிக்ஸ்’ காட்சிகள் அதிகமாக இடம்பெறுகின்றன.
விஜய் டி.வி.யில் தயாராகும் ‘வேலம்மாள்’ என்ற தொடரிலும் விக்னேஷ் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடி, பானு.
இவை தவிர, கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தில், அவருக்கு சித்தப்பா வேடத்தில் விக்னேஷ் நடிக்கிறார்.
Related Tags :
Next Story