நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா தொற்று


நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 13 Jan 2021 10:14 PM GMT (Updated: 13 Jan 2021 10:14 PM GMT)

தமிழில் கற்க கசடற படம் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம்தூம், வாமணன், நான் அவனில்லை 2. காஞ்சனா உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்தும் பிரபலமானார். தற்போது தமிழில் மிருகா, சின்ட்ரெல்லா படங்களில் நடித்து வருகிறார். ராய்லட்சுமி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்று இருந்தார். அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து துபாயில் சிகிச்சை பெற்று இப்போது மும்பை திரும்பி இருக்கிறார்.

இதுகுறித்து ராய் லட்சுமி கூறும்போது, “எனக்கு துபாயில் கொரோனா தொற்று உறுதியானதும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். 14 நாட்கள் சிகிச்சை பெற்றேன். மீண்டும் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று வந்ததால் மும்பை திரும்பினேன். கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. தற்போது வீட்டில் 10 நாட்கள் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன்'' என்றார்.

Next Story