பண மோசடி புகார்: சன்னி லியோன் முன்ஜாமீன் மனு


பண மோசடி புகார்: சன்னி லியோன் முன்ஜாமீன் மனு
x
தினத்தந்தி 11 Feb 2021 6:36 AM GMT (Updated: 2021-02-11T12:06:41+05:30)

பண மோசடி புகாரில் சன்னி லியோன் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியவர் சன்னி லியோன். இந்தியில் ஜிஸ்ம் 2, ஜாக்பாட், ராகிணி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கேரளாவில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றுள்ளார். 

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ஷியாஸ் என்பவர் சன்னிலியோன் மீது போலீசில் மோசடி புகார் அளித்தார். “ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சன்னிலியோனுக்கு ரூ.27 லட்சம் வழங்கினேன். ஆனால் ஒப்புக்கொண்டபடி அந்த நிகழ்ச்சிக்கு அவர் வரவில்லை. என்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித்தர மறுக்கிறார்'' என்று மனுவில் கூறியுள்ளார். 

சன்னிலியோனிடம் கேரள போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். இதனால் அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சன்னிலியோன் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். “நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் பல முறை ஒத்திவைத்தனர். பக்ரைனில் நிகழ்ச்சியை நடத்துவதாக கூறினர். அதுவும் நடக்கவில்லை. இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Next Story