காதலியுடன் சுற்றும் விஷ்ணு விஷால்

வெளியான ராட்சசன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்கள் நல்ல வசூல் பார்த்தன.
வெண்ணிலா கபடி குழு படத்தில் அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து அதிக படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் வெளியான ராட்சசன், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட சில படங்கள் நல்ல வசூல் பார்த்தன. தற்போது கைவசம் 4 படங்கள் வைத்துள்ளார். நடிப்பதோடு படங்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். விஷ்ணு விஷால் ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தார். அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் விஷ்ணு விஷாலுக்கும் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் நெருக்கமான புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தினர். விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காதலி ஜுவாலாவுடன் விஷ்ணு விஷால் மாலத்தீவில் சுற்றி வருகிறார். அங்கு இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகிறது.
Related Tags :
Next Story