ஹிருத்திக் ரோஷனுக்கு கோர்ட்டு சம்மன்


ஹிருத்திக் ரோஷனுக்கு கோர்ட்டு சம்மன்
x
தினத்தந்தி 27 Feb 2021 10:20 AM GMT (Updated: 27 Feb 2021 10:20 AM GMT)

நடிகை கங்கனா ரணாவத்துக்கும், பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கும் கிருஷ் 3 இந்தி படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.

ஹிருத்திக்கை தனது முன்னாள் காதலர் என்று கங்கனா விமர்சித்து இருந்தார். கங்கனாவை காதலிக்கவில்லை என்று ஹிருத்திக் மறுத்தார். இதனால் இருவரும் மாறி மாறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர்.இந்த நிலையில் கங்கனா தனக்கு மின்னஞ்சலில் தகவல் அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்தியதாக ஹிருத்திக் ரோஷன் வழக்கு தொடர்ந்தார். கங்கனா வெளியிட்ட பதிவில் ஹிருத்திக் மீண்டும் அழ ஆரம்பித்து இருக்கிறார். எங்கள் காதல் முறிவு, அவரது திருமண விவாகரத்து நடந்து பல வருடங்கள் ஆகியும் அதை கடந்து செல்ல மறுக்கிறார் என்று பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் ஹிருத்திக் தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராக மும்பை கோர்ட்டு அவருக்கு சம்மன் அனுப்பியது. இதையேற்று இன்று கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.

Next Story