சினிமா துளிகள்

ஜுராசிக் பார்க் பட இயக்குனர் சொந்த வாழ்க்கையை படமாக்கும் ‘ஸ்பீல் பெர்க்’ + "||" + Jurassic Park Film Director Filming own life Spielberg

ஜுராசிக் பார்க் பட இயக்குனர் சொந்த வாழ்க்கையை படமாக்கும் ‘ஸ்பீல் பெர்க்’

ஜுராசிக் பார்க் பட இயக்குனர் சொந்த வாழ்க்கையை படமாக்கும் ‘ஸ்பீல் பெர்க்’
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதையும் 2 முறை பெற்று இருக்கிறார்.
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இவர் ஜுராசிக் பார்க், வார் ஆப் த வேல்டு, த போஸ்ட், ஜாஸ், ரெடி இன் ப்ளேயர், முனிச், த போஸ்ட், எம்பயர் ஆப் த சன் உள்ளிட்ட படங்களை இயக்கி உலகம் முழுவதும் புகழ் பெற்றார். சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதையும் 2 முறை பெற்று இருக்கிறார். 1961-ல் வெளியான வெஸ்ட் சைட் ஸ்டோரி படத்தை ஸ்பீல்பெர்க் ரீமேக் செய்து வந்த நிலையில் கொரோனாவால் பணிகள் முடங்கியது. இந்த நிலையில் அடுத்து தனது குழந்தை பருவ வாழ்க்கையை மையமாக வைத்து புதிய படத்தை இயக்க தயாராகி இருக்கிறார். சிறுவயதில் அரிஸோனா மாகாணத்தில் வளர்ந்தபோது தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து இந்த படத்தின் திரைக்கதையை அவர் எழுதி இருக்கிறார். 1950 மற்றும் 60 காலகட்டங்களில் நடப்பதுபோன்ற கதையம்சத்தில் படம் தயாராகிறது. இந்த படத்தில் மிச்செல் வில்லியம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.