மீண்டும் நடிக்கும் நதியா

தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் அறிமுகமாகி 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. ரஜினிகாந்த் முதல் முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
1988-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு பிறகு குறிப்பிட்ட படங்களில் குணசித்திர நடிகையாக வந்தார்.
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு தாயாக நடித்து இருந்தார். விஷாலின் தாமிரபரணி படத்திலும் வந்தார். தெலுங்கு படங்களிலும் நடித்தார். தற்போது சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் தெலுங்கில் தயாராகிறது. இந்த படத்தில் நடிக்க நதியாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். திரிஷ்யம் 2 படத்தில் கீதா பிரபாகர் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நதியா நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு அரங்கில் நதியா மேக்கப் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் 2 தெலுங்கு
படங்களிலும் நடிக்கிறார்.
Related Tags :
Next Story