விக்ரமின் ‘அந்நியன்' இந்தியில் ‘ரீமேக்'


விக்ரமின் ‘அந்நியன் இந்தியில் ‘ரீமேக்
x
தினத்தந்தி 22 March 2021 12:10 PM GMT (Updated: 22 March 2021 12:10 PM GMT)

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ‘ரீமேக்’ செய்து நடிக்க அங்குள்ள நடிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் அக்‌ஷய்குமார் நடிக்க லட்சுமி என்ற பெயரில் ‘ரீமேக்’ செய்து வெளியிட்டனர். இதுபோல் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, ஶ்ரீ, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்த மாநகரம், விஜய்சேதுபதி, அசோக் செல்வன், வாணிபோஜன் நடித்த ஓ மை கடவுளே ஆகிய படங்களை இந்தியில் ‘ரீமேக்’ செய்கிறார்கள் கோலமாவு கோகிலா இந்தி ‘ரீமேக்’கில் நயன்தாரா கதாபாத்திரத்துக்கு மறைந்த நடிகை ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூரை ஒப்பந்தம் செய்துள்ளனர். கார்த்தியின் கைதி படமும் இந்தியில் தயாராகிறது. இந்த நிலையில் அந்நியன் படத்தையும் இந்தியில் ‘ரீமேக்’ செய்ய முயற்சிகள் நடக்கின்றன. இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் திரைக்கு வந்து பெரிய வரவேற்பை பெற்றது. இதில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என்று மூன்று தோற்றங்களில் வித்தியாசமாக நடித்து இருந்தார். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. நாயகியாக சதா நடித்திருந்தார். அந்நியன் இந்தி ‘ரீமேக்’கில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story