ஆன்மிகத்தில் பிரியங்கா சோப்ரா


ஆன்மிகத்தில் பிரியங்கா சோப்ரா
x
தினத்தந்தி 24 March 2021 11:24 AM GMT (Updated: 24 March 2021 11:24 AM GMT)

இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.

தமிழில் விஜய் ஜோடியாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை மணந்து தற்போது அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார். அங்கு அவர் அளித்த பேட்டியில், ''நம்மை விட பெரிய சக்தி ஒன்று உள்ளது. அதனை நம்புகிறேன். இந்தியாவில் பல மதங்கள் உள்ளன. நான் கிறிஸ்தவ பள்ளியில் படித்ததால் அந்த மதம் பற்றி தெரியும். எனது குடும்பம் இந்து என்பதால் அந்த மதத்தின் தத்துவங்கள் பற்றியும் எனது தந்தை மசூதியில் பாடுவார் என்பதால் அந்த மதம் குறித்தும் அறிந்து வைத்து இருக்கிறேன். இந்தியாவில் ஆன்மிகம் தவிர்க்க முடியாததாக உள்ளது. எனது தந்தை இறந்தபோது அந்த துக்கத்தில் இருந்து கடவுள் என்னை வெளியே கொண்டு வந்து பாதுகாத்ததை உணர்ந்தேன். அப்போது எல்லா கோவில்களுக்கும் சென்றேன். பிரார்த்தனைகள் செய்தேன். கோவில் குருமார்களையும் சந்தித்தேன். எனது வீட்டில் இந்து கோவில் உள்ளது. அங்கு பிரார்த்தனைகள் செய்கிறேன்.’’ என்றார்


Next Story