சினிமா துளிகள்

கேலி செய்பவர்களை சாடிய சோனாக்சி + "||" + Mocked the mockers Sonakshi

கேலி செய்பவர்களை சாடிய சோனாக்சி

கேலி செய்பவர்களை சாடிய சோனாக்சி
தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்‌சி சின்ஹா. இவர் பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள்.
சமீபகாலமாக சோனாக்சியை சமூக வலைத்தளத்தில் பலரும் கேலி செய்து வருகிறார்கள். ஏற்கனவே இந்தி பட உலகில் வாரிசு நடிகர்கள் ஆதிக்கம் உள்ளது என்ற குற்றச்சாட்டிலும் சிக்கினார். நடிகர் மகள் என்பதால் பட வாய்ப்புகள் எளிதாக கிடைக்கின்றன என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு பதில் அளித்து சோனாக்சி சின்ஹா கூறும்போது, ''என்னை சமூக வலைத்தளத்தில் கேலி செய்வதை பார்த்து ஆரம்பத்தில் வருத்தமாக இருந்தது. அதற்கு பதிலடியும் கொடுத்தேன். ஆனால் இப்போது அவற்றை கண்டுகொள்வது இல்லை. கேலியை தாண்டி செல்வதற்கு கற்றுக்கொண்டு இருக்கிறேன். கேலி செய்பவர்கள் ‘மொபைல்’ பின்னால் இருந்து எதிர்மறை கருத்துக்களை வெளியிடுகின்றனர். எனக்கு ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள்'' என்றார்