‘சுல்தான்’ படத்தின் ஜோடி ராஷ்மிகா மிக நேர்மையான கதாநாயகி நடிகர் கார்த்தி சொல்கிறார்


‘சுல்தான்’ படத்தின் ஜோடி ராஷ்மிகா மிக நேர்மையான கதாநாயகி  நடிகர் கார்த்தி சொல்கிறார்
x
தினத்தந்தி 28 March 2021 2:18 PM GMT (Updated: 28 March 2021 2:18 PM GMT)

கார்த்தி நடித்து அடுத்து திரைக்கு வரயிருக்கும் படம், ‘சுல்தான்.’ இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து இருக்கிறார். இருவரும் இணைந்து நடித்த அனுபவம் பற்றி கார்த்தி சொல்கிறார்.

‘‘வன்முறை பிடிக்காத ஒருவனிடம் ஒரு பொறுப்பு வந்து சேர்கிறது. அதை கடமையாக எடுத்துக்கொள்வதா, வேண்டாமா? அப்படி அவன் பொறுப்பை ஏற்றால், 100 ரவுடிகளை எதிர்கொள்ள வேண்டும். அவன் துணிச்சலாக எதிர்கொண்டானா, இல்லையா? என்பதுதான் இந்த படம்.

இதற்காக 100 பேரையும் ஒருங்கிணைத்து, பொறுமையாக காட்சிகளை படமாக்கினார், டைரக்டர் பாக்யராஜ் கண்ணன். கதாநாயகி ராஷ்மிகா பற்றி கூற வேண்டுமானால், அவர் மிக நேர்மையானவர். எதிலும் கவனமாக இருப்பார். அவர் எதிர்பார்த்த கிராமத்து பெண் கதாபாத்திரத்துக்காக காத்திருந்து நடித்து இருக்கிறார்.

டிராக்டர் ஓட்ட வேண்டும் என்று டைரக்டர் சொன்னால், உடனே சரி, நான் ஓட்டுகிறேன் என்பார். இதுபோல் என்ன சொன்னாலும், நான் செய்கிறேன் என்று கூறி, ஆர்வமுடன் செய்தார்.’’ இவ்வாறு கார்த்தி கூறினார்.

ராஷ்மிகா கூறியதாவது:-
‘‘ஒரு மொழி படத்தில் இருந்து இன்னொரு மொழி படத்துக்கு நேரடியாக நடிக்க செல்லும்போது, ஓரிரு நாட்கள் மொழி தடுமாற்றம் இருக்கும். கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களில், சொந்த குரலில் பேசியிருக்கிறேன்.

வேலை என்று வந்துவிட்டால் நண்பர்கள், குடும்பம் என்று என் கவனத்தை திருப்ப மாட்டேன். நான், நானாகவே இருப்பதால் இளைஞர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கிறது.’’ மேற்கண்டவாறு ராஷ்மிகா சொன்னார்.

Next Story