விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா படம் இந்தியில் ‘ரீமேக்'


விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா படம் இந்தியில் ‘ரீமேக்
x

தமிழில் வெற்றி பெற்ற படங்களை இந்தியில் ‘ரீமேக்’ செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.

மாநகரம், இரும்புத்திரை, கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்கள் இந்தியில் தயாராகின்றன. அடுத்து விக்ரம் வேதா படமும் இந்திக்கு போகிறது. விக்ரம் வேதா 2017-ல் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் மாதவன், விஜய்சேதுபதி, ஷரத்தா ஶ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் ஆகியோர் நடித்து இருந்தனர். புஷ்கர் காயத்ரி இயக்கினார். இந்த படத்தை கடந்த வருடமே இந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. ஆனால் கொரோனாவால் தாமதம் ஆனது. தற்போது பட வேலைகள் தொடங்கி உள்ளன. ஆரம்பத்தில் விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் நடிக்க ஷாருக்கானை அணுகினர். அவருக்கு கதையில் திருப்தி இல்லாமல் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது. பின்னர் அமீர்கானும் சயீப் அலிகானும் நடிக்க சம்மதித்தனர். அதன்பிறகு அமீர்கானும் விலகி விட்டார். தற்போது விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் மாதவன் வேடத்தில் சயீப் அலிகானும் நடிப்பது உறுதியாகி உள்ளது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளனர்.

Next Story