தற்கொலைக்கு முயன்ற நடிகை


தற்கொலைக்கு முயன்ற நடிகை
x
தினத்தந்தி 20 April 2021 11:55 PM (Updated: 20 April 2021 11:55 PM)
t-max-icont-min-icon

பராகான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்ற இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சவும்யா சேத்.

தொடர்ந்து படங்களில் நடித்த அவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் அருண் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

காதல், திருமண வாழ்க்கை குறித்து சவும்யா சேத் அளித்துள்ள பேட்டியில், “நான் கடந்த 2019-ல் கணவரை விவாகரத்து செய்தேன். தற்போது எனது குடும்பத்தினர் மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியாவில் வசிக்கிறேன்.

ஏற்கனவே நான் கர்ப்பமாக இருந்தபோது மன உளைச்சலால் பல நாட்கள் சாப்பிடவில்லை. கண்ணாடியில் எனது முகத்தை பார்க்கவே வெறுப்பாக இருந்தது. தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். ஆனால் எனது பெற்றோர் தடுத்துவிட்டனர். தற்கொலை உணர்வையும் மாற்றினார்கள். எனது குழந்தைக்காக வாழ வேண்டும் என்ற எண்ணமும் உருவானது. இந்தியாவுக்கு வர ஆசையாக உள்ளது. கொரோனாவால் வரமுடியவில்லை. இன்னும் காதலில் நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.
1 More update

Next Story