நடிகை மனிஷாவுக்கு கொரோனா தொற்று


நடிகை மனிஷாவுக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 22 April 2021 12:24 AM GMT (Updated: 2021-04-22T05:54:48+05:30)

தமிழில் வழக்கு எண் 18 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ்.

 தொடர்ந்து சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர், பார்த்திபனுடன் ஜன்னல் ஓரம், விதார்த் ஜோடியாக பட்டைய கிளப்பனும் பாண்டியா, ஜி.வி.பிரகாசுடன் திரிஷா இல்லன்னா நயன்தாரா, வெங்கட் பிரபுவின் சென்னை 28 இரண்டாம் பாகம், ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மனிஷா யாதவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. இதுகுறித்து மனிஷா யாதவ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். விரைவில் குணமாகி மீண்டு வருவேன். உடல்நிலையில் இதுவரை மோசமாக எதுவும் இல்லை. சில நேரங்களில் மூச்சு விட சிரமமாக உள்ளது. ஆனாலும் இது வராமல் தடுப்பது நல்லது. எனவே வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். முக கவசம் அணியுங்கள்'' என்று கூறியுள்ளார்.

கொரோனா 2-வது அலையில் ஏற்கனவே நடிகர்கள் அமீர்கான், அக்‌ஷய்குமார், மாதவன், டோவினோ தாமஸ், நடிகைகள் அலியாபட், கத்ரினா கைப், நிவேதா தாமஸ், நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Next Story