சினிமா துளிகள்

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே? + "||" + Surya paired up Pooja Hegde

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே?

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே?
தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு அதன்பிறகு வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நெல்சன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. இது தவிர பிரபாசுடன் தெலுங்கு, இந்தியில் தயாராகும் ராதே ஷியாம், சிரஞ்சீவியுடன் தெலுங்கில் ஆச்சார்யா, இந்தியில் சர்கஸ் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை நடிக்க வைக்க படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை சிவா இயக்க உள்ளார். இவர் அஜித்குமாரின் விஸ்வாசம், வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியவர்.

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தையும் டைரக்டு செய்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் முடிந்ததும் சூர்யா படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இது சூர்யாவுக்கு 40-வது படம். இந்த படத்தை முடித்து விட்டு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு சிவா படத்துக்கு வருகிறார்.