பிரபல பட அதிபர் கொரோனாவுக்கு பலி


பிரபல பட அதிபர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 27 April 2021 5:34 AM IST (Updated: 27 April 2021 5:34 AM IST)
t-max-icont-min-icon

சரத்குமார் நடித்த அரசு, விக்ராந்த் நடித்த நினைத்து நினைத்து பார்த்தேன் ஆகிய படங்களை தயாரித்தவர் பாபுராஜா.

தனது மகன்கள் நடித்த திருப்பதிசாமி குடும்பம் என்ற படத்தையும் தயாரித்துள்ளார். சூப்பர்குட் பிலிம்ஸ் பட நிறுவனத்தில் மானேஜராகவும் பணியாற்றி உள்ளார். சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த பாபுராஜாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அந்த ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி இல்லாததால் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்தனர். இந்த நிலையில் பாபுராஜா திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53. மரணம் அடைந்த பாபுராஜாவுக்கு மும்தாஜ் என்ற மனைவியும் ஜாவித் அஷ்ரப், ஜாகின் அஷ்ரப், ஜாபர் அஷ்ரப் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
1 More update

Next Story