மனைவியுடன் தகராறு; மலையாள நடிகர் தற்கொலை முயற்சி


மனைவியுடன் தகராறு; மலையாள நடிகர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 27 April 2021 12:11 AM GMT (Updated: 27 April 2021 12:11 AM GMT)

மலையாள நடிகர் ஆதித்யன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆதித்யனும், மலையாள நடிகை அம்பிலி தேவியும் 2 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் விமர்சனங்களை கிளப்பியது. ஆதித்யனுக்கு இது 4-வது திருமணம் என்றும். அம்பிலிக்கு 2-வது திருமணம் என்றும் கூறப்பட்டது. இந்த திருமண தகவலை கேள்விப்பட்டதும் அம்பிலியின் முதல் கணவர் கேக் வெட்டி கொண்டாடியது பரபரப்பானது. இந்த நிலையில் அம்பிலிக்கும், ஆதித்யனுக்கும் தற்போது குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. கணவர் தன்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக அம்பிலி புகார் கூறினார். பதிலுக்கு அம்பிலி தேவி மீது ஆதித்யன் குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த நிலையில் ஆதித்யன் திருச்சூரில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் உடலில் நரம்பை அறுத்து காருக்குள் ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை அடையாளம் கண்டவர்கள் உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Next Story