கொரோனாவுக்கு 2 இயக்குனர்கள் பலி


கொரோனாவுக்கு 2 இயக்குனர்கள் பலி
x
தினத்தந்தி 4 May 2021 12:57 AM GMT (Updated: 4 May 2021 12:57 AM GMT)

கொரோனா 2-அது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றில் சிக்கி பலர் உயிர் இழக்கிறார்கள். இந்த நிலையில் நவீன், குமார் வட்டி என்ற 2 இயக்குனர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

நவீன் கன்னட இளம் இயக்குனர் ஆவார். இவர் அப்பு வெங்கடேஷ் நடித்த ஒண்டே படம் மூலம் கன்னட திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். மேலும் பல படங்களை இயக்கி உள்ளார். 

கர்நாடகாவில் உள்ள மாண்டியாவில் வசித்த நவீனுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.கொரோனாவுக்கு பலியான குமார் வட்டி தெலுங்கு இயக்குனர் ஆவார். இவர் கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். 2 இயக்குனர்கள் கொரோனாவுக்கு பலியானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில தினங்களுக்கு முன்பு பிரபல தமிழ் பட இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.

Next Story