விதார்த் நடிக்கும் திகில் படத்தில் ஒரு புதிய அனுபவம்


விதார்த் நடிக்கும் திகில் படத்தில் ஒரு புதிய அனுபவம்
x
தினத்தந்தி 14 May 2021 2:36 PM GMT (Updated: 14 May 2021 2:36 PM GMT)

‘மைனா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விதார்த், இதுவரை 24 படங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய 25-வது படம் திகில் கதையம்சத்துடன் தயாராகி இருக்கிறது.

பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்பதால் அதற்கு பொருத்தமான இசை யமைப்பாளரை தேடி வந்தார்கள். இப்போது சாம் சி.எஸ். ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுபற்றி படத்தின் டைரக்டர் சீனிவாசன் கூறியதாவது:

‘‘விதார்த் நடிக்கும் 25-வது படம் மிக புதுமையான முறையில் தயாராகி இருக்கிறது. மிக அழுத்தமான கதையம்சம் கொண்ட படம், இது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், ‘மாண்டேஜ்’ஜில் வரும் பாடல்களுக்காகவும், பின்னணி இசை மிக முக்கியம் என்பதாலும் சரியான இசையமைப்பாளரை தேடிவந்தோம். இறுதியாக பின்னணி இசையில் கலக்கி வரும் சாம் சி.எஸ். இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய பின்னணி இசை புதிய அனுபவத்தை தருவதாக இருக்கும்.

படத்தில் கதாநாயகியாக தன்யா பால கிருஷ்ணன் நடித்து இருக்கிறார். ஜோதி முருகன், சீனிவாசன் ஆகிய இருவரும் படத்தை தயாரித்துள்ளனர்.

Next Story