சினிமா துளிகள்

சிவகார்த்திகேயன் படம் தணிக்கை + "||" + Sivakarthikeyan film Audit

சிவகார்த்திகேயன் படம் தணிக்கை

சிவகார்த்திகேயன் படம் தணிக்கை
சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் ஏற்கனவே தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
தணிக்கை உறுப்பினர்கள் படத்தை பார்த்து யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். படக்குழுவினர் யூ சான்றிதழ் எதிர்பார்த்தனர். ஆனால் சில சர்ச்சை காட்சிகளுக்காக யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களுக்கு யு சான்றிதழே கிடைத்து இருந்தன. டாக்டர் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

டாக்டர் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்து கொரோனாவால் திரைக்கு வாராமல் முடங்கி உள்ளது. படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் படம் ரிலீஸ் குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.