சினிமா துளிகள்

அடித்து சித்ரவதை; தூக்கில் தொங்கிய நடிகரின் மனைவி + "||" + Beat and torture; Actor wife was hanged

அடித்து சித்ரவதை; தூக்கில் தொங்கிய நடிகரின் மனைவி

அடித்து சித்ரவதை; தூக்கில் தொங்கிய நடிகரின் மனைவி
பிரபல மலையாள நடிகர் உன்னி தேவ். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் 2019-ல் திருமணம் நடந்தது.
இவர்கள் கேரளாவில் எர்ணாகுளம் பகுதியில் வசித்தனர். சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. மனைவியை உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து உன்னி தேவ் மீது பிரியங்கா போலீசில் புகார் அளித்தார். மனுவில் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 26. பிரியங்கா உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்கள் கூறும்போது, “பிரியங்கா உடலில் காயம் உள்ளது. உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால் தான் இறந்துள்ளார். பிரியங்காவின் நகைகளை உன்னி தேவ் விற்று செலவு செய்துள்ளார்” என்றனர். உன்னிதேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிலும் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவினரும், கோடீஸ்வர நண்பர்களும் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர்: பிரியங்கா
நாட்டில் பா.ஜனதாவினரும், அவர்களது கோடீஸ்வர நண்பர்களும் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர் என்று பிரியங்கா கூறியுள்ளார்.
2. ராகுல், பிரியங்காவுக்கு துணை நிற்பேன்: சித்து
பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்ததால் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் பதவி விலகினார். அவர் காங்கிரசில் இருந்தே விலக முடிவு செய்திருக்கும் நிலையில் பஞ்சாப்பில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும், அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளார்.