ரசிகர்களை எச்சரித்த நடிகர் சல்மான் கான்


ரசிகர்களை எச்சரித்த நடிகர் சல்மான் கான்
x
தினத்தந்தி 17 May 2021 3:42 PM IST (Updated: 17 May 2021 3:42 PM IST)
t-max-icont-min-icon

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், பரத், மேகா ஆகாஷ், திஷா பதானி ஆகியோர் நடித்த ராதே இந்தி படம் கொரோனாவால் தியேட்டர்களுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பணம் செலுத்தி படம் பார்க்கும் முறையில் இந்த படத்தை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் ராதே படம் ரிலீசான சில மணி நேரத்தில் திருட்டு இணைய தளத்திலும் வந்தது. ரசிகர்கள் பலர் திருட்டு இணையதளத்தில் படத்தை பார்த்து வருகிறார்கள். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து சட்டவிரோதமாக ராதே படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்து சல்மான்கான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’ராதே படத்தை நியாயமான விலையாக ரூ.249 கட்டணம் செலுத்தி பார்க்கும்படி கோரியிருந்தோம். இந்த படத்தை திருட்டு இணைய தளத்தில் வெளியிட்டு இருப்பது பெரிய குற்றம். சட்டவிரோதமான திருட்டு இணைய தளங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த திருட்டு இணைய தளத்தில் இருந்து ரசிகர்கள் படம் பார்க்க வேண்டாம். மீறி பார்த்தால் அவர்கள் மீதும் சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்’’ என்று கூறியுள்ளார்.
1 More update

Next Story