திரைக்கு வரயிருக்கும் 50 சிறு முதலீட்டு படங்கள்


திரைக்கு வரயிருக்கும் 50 சிறு முதலீட்டு படங்கள்
x
தினத்தந்தி 4 Jun 2021 3:06 PM GMT (Updated: 4 Jun 2021 3:06 PM GMT)

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் படங்களை ரிலீஸ் செய்வது தடைபட்டது.

ஓடிடி தளங்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. தியேட்டர்களில் கடைசியாக கார்த்தி நடித்த ‘சுல்தான், ’ தனுஷ் நடித்த ‘கர்ணன்’ ஆகிய 2 படங்களே திரையிடப்பட்டன.

கொரோனா உச்சத்தை தொட்டதும், படங்களின் ரிலீசுக்கு தடை வந்தது. இதனால் சிறு முதலீட்டு படங்கள் திரைக்கு வர முடியாமல் தேங்கின. காகித பூக்கள், சினிமா கனவுகள், இளம் நெஞ்சங்கள் உள்பட சுமார் 50 சிறு முதலீட்டு படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன.

இந்த படங்களை திரைக்கு கொண்டு வருவது பற்றி பட அதிபர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகியோர் கூடிப்பேச இருக்கிறார்கள்.

Next Story