வீட்டில் பிணமாக கிடந்த நடிகை


வீட்டில் பிணமாக கிடந்த நடிகை
x
தினத்தந்தி 14 Jun 2021 4:23 AM IST (Updated: 14 Jun 2021 4:23 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆபாச பட நடிகை டகோடா ஸ்கை. இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் டகோடா ஸ்கை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 27. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். டகோடா ஸ்கை மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது.

டகோடாவின் தாத்தாவும், பாட்டியும் கொரோனா பாதிப்பினால் இறந்துள்ளனர். அதன்பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. டகோடா ஸ்கை போலீசாரால் முட்டியால் கழுத்தில் நசுக்கி கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஸ் பிளாய்டு ஓவியத்தின் முன்னால் கடந்த மே மாதம் ஆடையில்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். அவரது செயலை பலரும் கண்டித்தனர்.
1 More update

Next Story