ஆர்யாவின் ‘டெடி' படம் 2-ம் பாகம்

தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் தயாராகி வரவேற்பை பெற்றுள்ளன.
ரஜினிகாந்தின் எந்திரன், கமல்ஹாசனின் விஸ்வரூபம். அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, லாரன்சின் காஞ்சனா ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வந்தது. கமலின் இந்தியன் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. சுந்தர்.சி.யின் அரண்மனை பேய் படத்தின் இரண்டு பாகங்கள் வந்துள்ளன. தற்போது அந்த படத்தின் 3-ம் பாகம் தயராகிறது.
இந்த நிலையில் ஆர்யா நடித்துள்ள டெடி படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. டெடி படம் கடந்த மார்ச் மாதம் ஓ.டி.டி.யில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆர்யா, சாயிஷா ஜோடியாக நடித்து இருந்தனர். டிக் டிக் டிக், மிருதன் படங்களை இயக்கி பிரபலமான சக்தி சவுந்தரராஜன் டைரக்டு செய்து இருந்தார். குழந்தைகளை படம் கவர்ந்ததால் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் டெடி படத்தின் 2-ம் பாகம் தயாராவதை ஆர்யா தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story