பட வாய்ப்புகளுக்காக பேசிப்பிரிந்த காதல் ஜோடி!


பட வாய்ப்புகளுக்காக பேசிப்பிரிந்த காதல் ஜோடி!
x
தினத்தந்தி 26 Jun 2021 10:57 PM GMT (Updated: 26 Jun 2021 10:57 PM GMT)

நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் ஒரு காலத்தில் காதலர்களாக இருந்தார்கள்.

இருவரும் ஜோடியாக நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ படப்பிடிப்பின்போது இரண்டு பேருக்கும் இடையே காதல் பற்றிக்கொண்டது. இந்த காதல் சில வருடங்களுக்கு நீடித்தது. இருவரும் திருமணம் வரை நெருங்கினார்கள்.

‘‘உடனடியாக திருமணம் செய்து கொண்டால் இரண்டு பேருக்கும் மார்க்கெட் காலியாகி விடும். கொஞ்ச நாட்கள் இப்படியே இருங்கள்’’ என்று அஞ்சலிக்கு நெருக்கமானவர்கள் யோசனை சொன்னார்கள்.

இந்த யோசனையை அஞ்சலியும், ஜெய்யும் ஏற்றுக்கொண்டார்கள். இருவரும் தனிமையில் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டார்கள். பிரிந்து இருப்பது போல் காட்டிக்கொண்டால்தான் இருவருக்கும் புது பட வாய்ப்புகள் வரும். இப்போது பிரிவோம்...பிறகு சேர்ந்து கொள்ளலாம்... என்று பேசிப்பிரிந்தார்கள். இதுவரை பிரிந்தே இருக்கிறார்கள்.

Next Story